Banner Image

தற்போது-2000

2010-ஆம் ஆண்டு ஷாருக்கான் நெரோலாக் வர்த்தக தூதர் ஆனார். 2006-ஆம் ஆண்டு, GNPL கன்சாய் நெரோலாக் என பெயரிடப்பட்டது. 2004-2006 காலகட்டத்தில், லொட் மற்றும் ஜெயின்பூர் தொழிற்சாலைகள், கிரீன்டெக் பாதுகாப்பு விருதில், முறையே தங்கம் மற்றும் வெள்ளி வென்றன. இந்த தொழிற்சாலைகள், OHSAS18001 சான்றிதழ்களும் பெற்றுள்ளன. நெரோலாக் பிராண்டின் மீது கவனம் செலுத்துவதற்காக, திரு. அமிதாப் பச்சன் பிராண்ட் தூதராக்கப்பட்டுள்ளார். அகன்க்ஷா அறக்கட்டளையுடன் இணைந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Banner Image

2000-1991

2000 ஆம் ஆண்டுக்குள் ஃபோர்ப்ஸ் கோக்காக் மற்றும் அதன் கூட்டுநிறுவனங்களின் முழு பங்குகளையும், கன்சாய் பெயின்ட்ஸ் வாங்கியதன் மூலம், இந்த நிறுவனம் 1999-ஆம் ஆண்டில் கன்சாய் பெயின்ட்ஸ்சின், துணை நிறுவனமாக ஆனது. நிறுவனத்தின் மொத்த பங்கில் 64.52% கன்சாய் பெயின்ட்ஸின் பங்கு ஆகும். நெரோலாக் ஜிங் “ஜப் கர் கீ ரவுனக் பதானி ஹோ” பிரபலமானது.

Banner Image

1990- 1981

1983-இல் பம்பாய் மற்றும் புனே நகரங்களில் GNP101 ஆட்டோ பெயிண்ட்களை நெரோலாக் அறிமுகப்படுத்தியது. 24 அடிப்படை நிறங்கள், மெட்டாலிக் பிரிவில் 12 நிறங்கள் மற்றும் துடிப்பான ரேஞ்சில், 12 நிறங்கள் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டன. 1986 ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் ஒசாகாவில், கன்சாய் பெயின்ட்ஸ் கம்பெனி லிமிடெட் உடன் TAA ஒப்பந்தத்தை GNPL ஏற்படுத்திக்கொண்டது. கத்தோடிக் எலெக்ட்ரோடெப்போசிஷன் பிரைமர் மற்றும் வாகன தயாரிப்புகளுக்கான மற்ற நவீன பூச்சுகள் ஆகியவற்றிற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தியாவில் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் GNPL ஆகும்.

Banner Image

1980- 1950

1970 ஆம் ஆண்டில், சிரிக்கும் புலி, கூடி, என்பது நிறுவனத்தின் சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்டது. 1957 ஆம் ஆண்டில், நிறுவனத்தின் பெயரானது குட்லஸ் நெரோலாக் பெயின்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆக மாற்றப்பட்டது. நிறுவனத்தின் பெயரில் நிறுவனத்தின் மிக வெற்றிகரமான தயாரிப்பு பிராண்ட் பெயரை சேர்ப்பது பொருத்தமானது என்று கருதப்பட்டு இவ்வாறு செய்யப்பட்டது. 1968 ஆம் ஆண்டில், நிறுவனம் பப்ளிக்கிற்கு சென்றதும் “தனியார்” என்ற வார்த்தை கைவிடப்பட்டது. 1950 களில், நிறுவனத்தின் நட்சத்திர தயாரிப்பு என்பது ஆன்டி-காஸ் வார்னிஷ் ஆகும். இது முக்கியமாக பாதுகாப்புதுறையில் பயன்படுத்தப்பட்டது.

Banner Image

ஆரம்பகால 1920கள்

நவம்பர் 1930 இல் இங்கிலாந்தில், மூன்று பிரிட்டிஷ் நிறுவனங்கள் இணைந்து, குட்லஸ் வால் மற்றும் லீட் இண்டஸ்ட்ரீஸ் க்ரூப் லிமிட்டெட் நிறுவனத்தை உருவாக்கின. இது பின்னர் லீட் இண்டஸ்ட்ரீஸ் க்ரூப் (LIG) லிமிடெட் ஆனது. 1933 ஏப்ரலில் LIG, லிவர்பூல், இங்கிலாந்து இந்த நிறுவனத்தை வாங்கி, குட்லஸ் வால் (இந்தியா) என பெயர் சூட்டியது. தி அமெரிக்கன் பெயிண்ட் அண்ட் வார்னிஷ் கம்பெனியை இங்கிலாந்து நிறுவனமான, ஆலன் ப்ரோஸ் அண்ட் கோ கம்பெனி 1920 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் வாங்கி, கஹகன் பெயிண்ட் மற்றும் வார்னிஷ் கோ லிமிட்டடாக ஆனது.

எங்களைப் பற்றி

1920 ஆம் ஆண்டில், கஹாகன் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் மும்பையின் லோவர் பரேல் பகுதியில் அமைந்தது.ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, இந்த பெயிண்ட் நிறுவனம் பொறாமையாக பார்க்கும் நிலைக்கு வளர்ந்துள்ளது- இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பெயின்ட் நிறுவனமாகவும், தொழில் துறையில் மிகவும் நம்பகமான பெயர்களில் ஒன்றாகவும் உள்ளது.

ஒப்பீட்டளவில் சிறு பெயின்ட் நிறுவனமாக இருந்து, கன்சாய் நெரோலாக் போன்ற மாபெரும் நிறுவனமாக வளர்ச்சியடைய காரணம் என்ன?

கடின உழைப்பு மற்றும் ஆர்வம்தான் இதற்கு காரணம். அது அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தால் நிகழ்ந்தது. அச்சமற்ற கண்டுபிடிப்புடன் முன்னேறி செல்வது. இது ரிஸ்க்குகளை எடுத்துக்கொள்வதும், அவை வேலை செய்யும்போது கொண்டாடுவதையும், கொண்டது. வேலை செய்யவில்லை எனும்போது, வரைவு குழுவிற்கே திரும்பி திட்டமிடுதல். வாடிக்கையாளர் தேவைகளை அறிந்து திருப்திப்படுத்த மிகவும் ஆர்வமாக இருப்பதன் பலன் இது. இன்னும் சுற்றுச்சூழலில் முதலீடு செய்யப்படுகிறது. ஆராய்ச்சி & மேம்பாட்டுக்கு, தொழில்நுட்பத்திற்கு, பணியாளர்களுக்கு முதலீடு செய்வது. மேலும் முக்கியமாக, தயாரிப்பு மீதான அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் உறுதியான தீர்மானம்.

இவை அனைத்தாலும் மற்றும் இன்னும் பல காரணங்களுக்காகவும், கன்சாய் நெரோலாக் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கோட்டிங் நிறுவனமாக உள்ளது. தொழில்துறை கோட்டிங்கில் மார்க்கெட் லீடராக உள்ளது.

NEROLLAC

உங்கள் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள்